Thursday, November 11, 2010

விவேக்குக்காக மன்னிப்புக் கேட்ட தனுஷ்!

விவேக்குக்காக கவுண்டர் இன மக்களிடம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் உத்தமபுத்திரன்.
இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ள விவேக், கவுண்டர் இன மக்கள் குறித்து மோசமாக கமெண்ட் அடித்துள்ளதாகக் கூறி கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் கோவை மற்றும் சேலம் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.

உடம்பைத்தொட்டு சில்மிஷம் செய்த

கூட்டத்தில் சிக்கிக் கொண்ட தன்னிடம் சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகர் கன்னத்தில் அறைவிட்டார் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா.

முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜெனிலியாவை அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள்.

ஜெனிலியா வந்ததும் கூட்டம் அவரை மொய்த்துக்கொண்டது. விழா நடத்தியவர்களால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார் ஜெனிலியா. அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெனிலியாவின் உடம்பை தொட்டு சில்மிஷம் செய்தார். இதில் பொறுமையிழந்த ஜெனிலியா , ரசிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரசிகர்களும் விலகிக் கொண்டனர். ஆனால் பின்னர் இதனை மறுத்தார் ஜெனிலியா. \'ரசிகர் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு ரசிகர் தன்னை நெருக்கியதும் உண்மையே... ஆனால் அவரை தள்ளிவிட்டதோடு சரி. அடிக்கவில்லை,\' என்று கூறியுள்ளார் ஜெனிலியா.

Wednesday, November 10, 2010

தலைவன் இருக்கின்றான்” அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

அடுத்த படம் தலைவன் இருக்கின்றான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் “தலைவன் இருக்கின்றான் என அறிவித்துள்ளார் கமல்.
இந்தப் படத்தை தானெ இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், “இப்போது எனது அடுத்த படத்தின் திரைக்கதை வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலில் தலைவன் இருக்கிறான் என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி தலைவன் இருக்கின்றான் என்பதுதான் சரியானது. இது ஒரு பெரிய பட்ஜெட் படம். அனைத்துலக சமூகத்தைப் பற்றியதானது இந்தப் படம் தான் இப்போது என் மனதை ஆக்கிரமித்துள்ளது. இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

Monday, August 2, 2010

வித்தியாசமான இடம் தேடும் இயக்குநர்


கே.வி. ஆனந்த் ஜீவா, அஜ்மலை வைத்து இயக்கும் படம் கோ. இந்தப் படம் வேகவேகமாக வளர்ந்து வருகிறது.
படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் பாடல் காட்சிகள் சில மட்டும் மீதம் இருக்க எங்காவது வித்தியாசமான இடங்களைத் தேர்ந்தெடுத்து ஷூட் பண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறது இயக்குநர் தரப்பு.

இதனால் சீனா மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் இதுவரையில் சினிமாகாரர்கள் கால்படாத இடமாகத் தேடிப் பிடித்து படம் பிடிக்கப் போகிறார்களாம். சமீபத்தில் ‘கோ’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சென்னையில் உள்ள பரபரப்பான பகுதியான மின்ட் ஸ்ட்ரீட்டில் படம் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளிடம் பிரியம் காட்டும் திரிஷா


நடிகை திரிஷா பிராணிகளிடம் பிரியம் காட்டி வருகிறார். இதனால் அவருக்கு சமீபத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு தூதர் பதவி தேடி வந்துள்ளது.
பிரபல இந்தி நடிகர்- நடிகைகள்தான் இதில் தூதர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷா வீட்டிலும் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய் விபத்தில் அடிபட்டு கேட்பாரற்று கிடந்ததாம். அதைக் காப்பாற்றி தற்போது வளர்த்து வருகிறார் திரிஷா.அதற்கு காட்பெரி என்ற பெயரிட்டு வளர்த்து வருகிறார் அவர். இந்தியாவில் உள்ள எல்லோருக்குமே பிராணிகள் மேல் அன்பும் அக்கறையும் வரவேண்டும். நாய், பூனை போன்ற பிராணிகளிடம் அன்பு காட்டி அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். தெருக்களில் ஏராள மான நாய், பூனைகளை பார்க்க முடியும். அவை அரவணைப்பை தேடுகின்றன. வீடுகளில் வளரவும் விரும்புகின்றன. அவைகளுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும். பிராணிகளை ரசிகர்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும் என்கிறார் திரிஷா.

வில்லியாக நடிக்கும் நமீதா


முதல்- அமைச்சர் கருணாநிதி கதை, வசனத்தில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இளைஞன் படத்தில் நமீதா வில்லியாக நடிக்கிறார்.
இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் எங்கள் அண்ணா. ஏய், சாணக்யா, ஆணை போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தார். கடைசியாக சுந்தர்.சியுடன் குரு சிஷ்யன் படத்தில் நடித்தார். தற்போது இளைஞன் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளில் தலா ஒருபடம் நடித்து வருகிறார்.கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.இளைஞன் படத்தில் மீராஜாஸ்மின், ரம்யா நம்பீசன், குஷ்பு, சுமன் போன்றோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்து வருகிறது. வில்லியாக நடிப்பது பற்றி நமீதா சொல்கிறார்.

நான் இப்படத்தில் மோசமான பெண் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் போல நிஜ வாழ்க்கையில் நான் இல்லை. எனவே என்னை வெறுக்க வேண்டாம் என்கிறார் நமீதா.

 
Photography Templates | Slideshow Software