Thursday, November 11, 2010

விவேக்குக்காக மன்னிப்புக் கேட்ட தனுஷ்!

விவேக்குக்காக கவுண்டர் இன மக்களிடம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தனுஷ் நடித்து வெளியாகியுள்ள படம் உத்தமபுத்திரன்.
இந்தப் படத்தில் காமெடியனாக நடித்துள்ள விவேக், கவுண்டர் இன மக்கள் குறித்து மோசமாக கமெண்ட் அடித்துள்ளதாகக் கூறி கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழகம் கோவை மற்றும் சேலம் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது.

உடம்பைத்தொட்டு சில்மிஷம் செய்த

கூட்டத்தில் சிக்கிக் கொண்ட தன்னிடம் சில்மிஷம் செய்த தெலுங்கு ரசிகர் கன்னத்தில் அறைவிட்டார் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா.

முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜெனிலியாவை அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள்.

ஜெனிலியா வந்ததும் கூட்டம் அவரை மொய்த்துக்கொண்டது. விழா நடத்தியவர்களால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார் ஜெனிலியா. அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெனிலியாவின் உடம்பை தொட்டு சில்மிஷம் செய்தார். இதில் பொறுமையிழந்த ஜெனிலியா , ரசிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரசிகர்களும் விலகிக் கொண்டனர். ஆனால் பின்னர் இதனை மறுத்தார் ஜெனிலியா. \'ரசிகர் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு ரசிகர் தன்னை நெருக்கியதும் உண்மையே... ஆனால் அவரை தள்ளிவிட்டதோடு சரி. அடிக்கவில்லை,\' என்று கூறியுள்ளார் ஜெனிலியா.

Wednesday, November 10, 2010

தலைவன் இருக்கின்றான்” அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கமல்

அடுத்த படம் தலைவன் இருக்கின்றான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் “தலைவன் இருக்கின்றான் என அறிவித்துள்ளார் கமல்.
இந்தப் படத்தை தானெ இயக்கலாம் அல்லது தனக்கு நெருக்கமான இயக்குநர் இயக்கவும் வாய்ப்புள்ளது என அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல மலையாள நாளிதழுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், “இப்போது எனது அடுத்த படத்தின் திரைக்கதை வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப் படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதலில் தலைவன் இருக்கிறான் என்றுதான் வைத்தேன். இலக்கணப்படி தலைவன் இருக்கின்றான் என்பதுதான் சரியானது. இது ஒரு பெரிய பட்ஜெட் படம். அனைத்துலக சமூகத்தைப் பற்றியதானது இந்தப் படம் தான் இப்போது என் மனதை ஆக்கிரமித்துள்ளது. இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

 
Photography Templates | Slideshow Software